பிரபல பாலிவுட் நடிகர் காதர் கான் காலமானார்

 

பிரபல பாலிவுட் நடிகர் காதர் கான் காலமானார்

பிரபல பாலிவுட் நடிகர் காதர் கான்(81) உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார்.

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் காதர் கான்(81) உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார்.

பாலிவுட் திரையுலகில் நடிகராகவும், வசனகர்த்தாவாகவும் திகழ்ந்த காதர் கான், கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, கனடா நாட்டில் டொரண்டோ நகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4 மணிக்கு காதர் கான் உயிரிழந்ததாக அவரது குடுபத்தினர் தெரிவித்துள்ளனர்.

kaderkhan

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் பிறந்த காதர் கான், மும்பையில் செட்டிலானார். கடந்த 1973ம் ஆண்டு ராஜேஷ் கண்ணாவின் ‘தாக்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகான காதர் கான் சுமார் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். காமெடி, குணச்சித்திர வேடம், வில்லன் என பல்வேறு பரிமாணங்களில் தனது சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

kaderkhan

நடிகர் காதர் கான் உடல்நலம் பெற வேண்டி பாலிவுட் பிரபலங்கள் ஏராளமானோர் கடவுளிடம் பிரார்த்தனை செய்தனர். நேற்றே காதர் கான் மறைந்துவிட்டதாக வதந்தி பரவிய நிலையில், அவரது மகனும், நடிகருமான சர்பிராஸ் கான் அதனை மறுத்திருந்தார்.

kaderkhan

ஆனால், இன்று காதர் கான் மறைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காதர் கானின் இறுதிச் சடங்கு கனடாவில் இன்று மாலை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.