பிரபல பாடகர் கே.ஜே.ஜேசுதாஸின் சகோதரர் ஏரியில் சடலமாக மீட்பு!

 

பிரபல  பாடகர் கே.ஜே.ஜேசுதாஸின் சகோதரர்  ஏரியில் சடலமாக மீட்பு!

ஆயிரம் பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார். 80 வயதாகும் ஜேசுதாஸிற்கு கே.ஜே.ஜஸ்டின் என்ற சகோதரர் உள்ளார்.

கேரளா : பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸின் சகோதரர் கே.ஜே.ஜஸ்டின் உடல் கொச்சி ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ். கேரளாவைச் சேர்ந்த  இவர் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, மராத்தி, பஞ்சாபி, ஆங்கிலம் என 14  மொழிகளில் சுமார் 50 ஆயிரம் பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார். 80 வயதாகும் ஜேசுதாஸிற்கு கே.ஜே.ஜஸ்டின் என்ற சகோதரர் உள்ளார். 

 

ஜஸ்டின் இரண்டு நாட்களாக வீட்டிற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று முன்தினம்  ஜஸ்டினை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர்  திரிக்ககர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இதையடுத்து அதே வயதுடைய ஒருவர் ஏரியில் இறந்துகிடப்பதாக  திரிக்ககர போலீசுக்கு தகவல் கிடைத்தது.  

rrn

இந்நிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் வல்லர் படத்தில் டிபி வேர்ல்ட் அருகே ஒரு ஏரியில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதில் இறந்தவர் யேசுதாஸின் சகோதரர் கே.ஜே.ஜஸ்டின் என அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து அவரது உடல் எர்ணாகுளம் பொது மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.  இதுகுறித்து போலீசார் ஜஸ்டின் வீட்டிற்கு தெரிவித்தனர். இதையடுத்து ஜஸ்டினின் உறவினர்கள் இரவு 11.30 மணியளவில் எர்ணாகுளம் பொது மருத்துவமனைக்கு விரைந்தனர்.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை செய்து வருகிறார்கள்.