பிரபல பாடகருடன் “லிவிங் டு கெதரில்” நடிகை அமலா பால்: வைரல் போட்டோஸ்!

 

பிரபல பாடகருடன் “லிவிங் டு கெதரில்” நடிகை அமலா பால்:  வைரல் போட்டோஸ்!

 இருப்பினும் அமலா பால் தனக்கு புதிய காதலர் உள்ளதாக ஆடை படத்தின் போது  அறிவித்தார்

தமிழில் கீரிடம், தெய்வ திருமகன், தேவி 2  உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர்  ஏ.எல். விஜய். இவர் இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் அறிமுகமான அமலா பாலை  கடந்த 2014 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். பின்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளிலேயே  விவாகரத்து பெற்றனர்.

இதையடுத்து  அமலாபால் மீண்டும்  தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பிஸியாகி விட்டார்.  சமீபத்தில் இவர் ஆடை படத்தில் நடித்துள்ளார்.இதையடுத்து படங்கள் இயக்குவதில் ஆர்வம் காட்டி வந்த இயக்குநர்  ஏ.எல் விஜய்   ஐஸ்வர்யா என்ற பெண்ணை இரண்டாவது  திருமணம் செய்து கொண்டார்.  இருப்பினும் அமலா பால் தனக்கு புதிய காதலர் உள்ளதாக ஆடை படத்தின் போது  அறிவித்தார்.  

ttn

இந்நிலையில் நடிகை அமலாபால் மும்பையைச் சேர்ந்த பாடகர் பவிந்தர் சிங்கை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவரும் அமலா பாலும் லிவிங் டு  கெதரில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் அமலாபால் உடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை தனது சமூகவலைதளத்திலிருந்து நீக்கிய பவிந்தர் சிங் தற்போது அதை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் ஒரு பெண்ணை கட்டிப் பிடித்தபடி போஸ் கொடுத்துள்ளார் பவிந்தர் சிங். இது அமலா பால் என்று தெரிகிறது.

ttn

முன்னதாக தனது காதலர் குறித்து பேசிய அமலா பால், ஒரு தாயை போல அவர் என்னை பார்த்து கொள்கிறார்.  என்னுடன் இருக்க அவர் வேலையை அவர் விட்டுவிட்டார். என் கனவு என்னவென்று அவருக்குத் தெரியும்.  அவர் அதை  மதிக்கிறார். என் வாழ்க்கையில்  நான் கண்ட உண்மை’ என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல்  சமீபத்தில் ஏ.எல் விஜய் அப்பாவும் தயாரிப்பாளருமான ஏ. எல் அழகப்பன் என் மகன் விவாகரத்து நடக்க தனுஷ் தான் காரணம் என பேட்டி ஒன்றில் கூறி சர்ச்சையை கிளப்பினார்.