பிரபல நடிகை மீது பாஜகவினர் போலீசில் புகார்: பின்னணி என்ன?

 

பிரபல நடிகை மீது பாஜகவினர் போலீசில் புகார்: பின்னணி என்ன?

நடிகையும், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியுமான  திவ்யா மீது  பாஜக பிரமுகர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சென்னை: நடிகையும், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியுமான  திவ்யா மீது  பாஜக பிரமுகர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தமிழில் சிம்புவுடன் குத்து, சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் முதலியன படங்களில் நடித்தவர் ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா. காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியான இவர், கடந்த சில தினங்களுக்கு முன் டிவிட்டரில் பிரதமர் மோடி தன் மெழுகு சிலை மீது தானே திருடன் என எழுதிக் கொள்வது போன்ற புகைப்படத்தை பதிவிட்டார். இது  சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்தியாவை ஆட்சி புரிந்த  இங்கிலாந்து கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராகக் கடற்கொள்ளையர்கள் போர் நடந்தது குறித்து விளக்கும் படமாக தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் படம் உருவாகியுள்ளது. இதில் நடிகர்கள் அமிதாப் பச்சன், அமீர்கான் ஆகியோர் நடித்துள்ளனர். 

இந்தப் படத்தில் நடிகர் அமீர்கான் அனைவரையும் ஏமாற்றும் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இதன் டிரைலரின் ஒரு காட்சியில் அவர் நம்பிக்கை துரோகம் என்பது எனது சுபாவம் என்று கூறுவார்.  இதையடுத்து மீண்டும் திவ்யா அமீர்கான் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டு, ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திற்கு மோடி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என பதிவிட்டுள்ளார். 

 

இதன் காரணமாக  தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் தலைமையில் கட்சி உறுப்பினர்கள் சிலர் கோவை சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளனர். அதில், கர்நாடகாவின் முன்னாள் எம்.பி.யான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திவ்யா ஸ்பந்தனா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.