பிரபல நடிகையுடன் அமைச்சர் ஜெயக்குமார் போட்டோ: அவதூறு பரப்பிய நபர் கைது!

 

பிரபல நடிகையுடன் அமைச்சர் ஜெயக்குமார் போட்டோ: அவதூறு பரப்பிய நபர் கைது!

சமூக வலைதளத்தில் அமைச்சர் ஜெயக்குமார்  குறித்து அவதூறு புகைப்படம் வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை : சமூக வலைதளத்தில் அமைச்சர் ஜெயக்குமார்  குறித்து அவதூறு புகைப்படம் வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் திருமுட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமுத்து. சிங்கப்பூரில் பணியாற்றி வரும் இவர், கடந்த ஆண்டு அமைச்சர் ஜெயகுமார், பிரபல நடிகையுடன் இருப்பது போன்ற மார்பிங் புகைப்படம் ஒன்றை முகநூலில் பரப்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரில் வீரமுத்து மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்த போது அவர் சிங்கப்பூரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தமிழகம் திரும்பும் போது தகவல் தெரிவிக்கும்படி விமான நிலைய குடியுரிமை சரிபார்ப்பு அதிகாரிகளிடம் , காவல்துறையினர் சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக வீரமுத்து சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அவரது பெயர் லுக் அவுட் நோட்டீசில் இருந்ததால் அவரைச் சிறிது நேரம் காத்திருக்க வைத்த விமான நிலைய அதிகாரிகள், வீரமுத்துவை சென்னை மத்திய குற்றபிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

veeramuthu

அமைச்சர் ஜெயக்குமார் குறித்து அவதூறு புகைப்படம் பரப்பிய வழக்கில் வீரமுத்து கைது செய்யப்பட்டார். விசாரணையில் அமைச்சர் ஜெயகுமார், பா.ம.க குறித்து பேட்டி ஒன்றில் விமர்சித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அந்தப் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக வீரமுத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரை நீதிபதியின் முன்பு ஆஜர் படுத்திய போது, வீரமுத்து ஊடகங்கள் முன்னிலையில் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க நீதிபதி உத்தரவிட்டதோடு அவருக்கு நிபந்தை ஜாமீன் வழங்கினார். இதனையடுத்து வீரமுத்து தான் செய்த அவதூறு பிரசாரத்திற்கு ஊடகங்கள் முன்னிலையில் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.