பிரபல நடிகர்,நடிகைகளை பின்னுக்கு தள்ளிய ராஜா ராணி செம்பா!எப்படினு  தெரியுமா?

 

பிரபல நடிகர்,நடிகைகளை பின்னுக்கு தள்ளிய ராஜா ராணி செம்பா!எப்படினு  தெரியுமா?

நடிகை ஆல்யா மானசா பிரபல நடிகர், நடிகைகளை பின்னுக்கு தள்ளி ஷேர் சாட்டில் முதல் இடத்தை பிடித்துள்ளார்

சென்னை: நடிகை ஆல்யா மானசா பிரபல நடிகர், நடிகைகளை பின்னுக்கு தள்ளி ஷேர் சாட்டில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

வெள்ளித் திரை நடிகைகளுக்கு இணையாகத் தொலைக்காட்சி தொகுப்பாளர்களும், சீரியல் நடிகைகளும் பிரபலமாகி வருகின்றனர். அந்தவகையில் ‘ராஜா ராணி’ சீரியலில் நடித்து வரும் ஆல்யா மானசாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

alya manasa

முன்னதாக மானஸ் என்பவரைக் காதலித்து வந்த மானசா கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரைப் பிரிந்தார். இதையடுத்து  ராஜா ராணி சீரியலில் அவருடன் நடிக்கும் சஞ்சீவ் கார்த்திகை ஆல்யா மானசா காதலித்து வருகிறார். இதை இருவருமே உறுதி செய்துள்ளனர்.

alyamanasa

ஆல்யா மானசா சீரியல் நடிகை என்பதையும் கடந்து, தனது டிக் டாக் வீடியோக்கள் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தையே தனக்கென உருவாக்கி வைத்திருப்பவர், இவருடைய டிக் டாக் வீடியோக்களை பார்ப்பதற்காகவே இவரின் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களை லட்சக்கணக்கானோர் பின் தொடர்கின்றனர்.

அந்த வகையில், கடந்த மாதம் 27-ம் தேதியன்று இவர் ஷேர் சாட் எனப்படும் சமூகவலைதள பக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். அதில், தற்போது நம்பர் 1 இடத்தையும் பிடித்துள்ளார். இந்த தகவலை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஆல்யா, ரசிகர்களின் அளவு கடந்த அன்பிற்கு தன் நன்றிகளையும் தெரிவித்துள்ளார். 

இதன்மூலம், மற்ற தமிழ் நடிகர், நடிகைகளை பின்னுக்குத் தள்ளி, அனைவரையும் விட அதிக பின் தொடர்பாளர்களை கொண்டவராக ஆல்யா உருவெடுத்துள்ளார்.