பிரபல நடிகர்களை உருவாக்கிய கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி காலமானார்

 

பிரபல நடிகர்களை உருவாக்கிய கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி காலமானார்

உடல்நலக்குறைவு காரணமாக கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி சென்னையில் இன்று இயற்கை எய்தினார்.

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி சென்னையில் இன்று இயற்கை எய்தினார்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புஞ்சை என்ற கிராமத்தில் பிறந்தவர் ந.முத்துசாமி. கலைத்துறையின் மீது கொண்ட காதலினால், ‘கூத்துப்பட்டறை’ என்ற நாடக அமைப்பை நிறுவினார்.

இன்றைக்கு பிரபல நடிகர்களாக அறியப்படும் விஜய் சேதுபதி, விஷால், பசுபதி போன்ற நடிகர்கள் இவரின் கூத்துப்பட்டறையில் தான் நடிப்பு பயின்றனர். 

இவர் எழுதிய ‘ந. முத்துசாமி கட்டுரைகள்’ எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. 

இவரது கலைச்சேவையை பாராட்டும் விதமாக கடந்த 2012-ஆம் ஆண்டு இவருக்கு “பத்மஸ்ரீ” விருது வழங்கு கவுரவித்துள்ளது. அவள் பெயர் தமிழரசி என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், சமீப காலமாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த ந.முத்துசாமி, சென்னையில் இன்று உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 82. அவரின் மறைவுக்கு ஏராளமான கலைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.