பிரபல நடிகரின் தங்கை புற்று நோயால் மரணம்; சோகத்தில் மூழ்கிய குடும்பம்!

 

பிரபல நடிகரின் தங்கை புற்று நோயால் மரணம்; சோகத்தில் மூழ்கிய குடும்பம்!

ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி  நடிகராக வலம்  வருபவர் நடிகர்  நவாசுதீன் சித்திக். இவர் சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் சிங்காரம் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரளவைத்தார். உத்தரப்பிரதேசம் புதானா என்ற கிராமத்தில்  சாதாரண குடும்பத்தில் பிறந்த இவருக்கு உடன் பிறந்தவர்கள் மொத்தம் 9 பேர். ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

ttn

இந்நிலையில் நவாசுதீன் சித்திக் சகோதரி ஷியாமா சித்திக் புற்றுநோய் காரணமாக மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 26.  ஷியாமா 18 வயதில் இருக்கும் போது அவருக்கு மார்பகப் புற்றுநோய்  ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 8 ஆண்டுகளாகச் சிகிச்சை பெற்று வந்த இவர் தற்போது சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். 

ttn

அமெரிக்காவில் படப்பிடிப்பிலிருந்த நவாசுதீன் சித்திக் சகோதரியின் மரணத்தால் இந்தியா திரும்புகிறார். இந்த செய்தியை  அறிந்த பாலிவுட் நடிகர் நடிகைகள்  நவாசுதீன் சித்திக் சகோதரி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.