பிரபல நடிகரின் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற இளைஞர்: காரணம் இதுதானாம்!?

 

பிரபல நடிகரின் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற இளைஞர்: காரணம்  இதுதானாம்!?

நடிகர் அமீர்கான் அலுவலகம் முன்பு இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பை: நடிகர் அமீர்கான் அலுவலகம் முன்பு இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

amir

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானின் மும்பை அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் பெலகாவியை சேர்ந்த முகமது காஷிம் என்பவர் வந்துள்ளார். 33 வயதான முகமது காஷிம் அமீர் கானை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால்  அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை  அனுமதிக்கவில்லை. இதனால் வேதனையடைந்த அவர், தான் வைத்திருந்த விஷத்தைக் குடித்துள்ளார். இதைக் கண்ட அங்கிருந்த பாதுகாவலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே அவரை மீட்டு  அங்கிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவர் உயிர் பிழைத்தார். 

suicide

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், ‘ இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதில் நான் ஆர்வம் காட்டி வந்தேன். இதனால்  இது குறித்து  நடிகர் அமீர்கானிடம் ஆலோசனை பெற விரும்பினேன். அவரை சந்திக்கப் பலமுறை நான் மும்பை வந்தேன். ஆனால்  எனக்குத் தொடர்ந்து  அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் இந்த முறை  நான்  விரக்தியில் தற்கொலைக்கு முயன்றேன்’ என்றார். இதைத் தொடர்ந்து போலீசார் அவரது பெற்றோரை வரவழைத்து  முகமது காஷிமை  அவர்களுடன் அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.