பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

 

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு இங்கிலாந்து மான்செஸ்டர் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

லண்டன்: பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு இங்கிலாந்து மான்செஸ்டர் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

பிரபல தொழிலதிபரும், முன்னாள் டாடா குழுமத் தலைவருமான ரத்தன் டாடாவுக்கு இங்கிலாந்து மான்செஸ்டர் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. மனிதநேயம், சமூக பொறுப்புணர்வு, புதிய கண்டுபிடிப்புகளில் அவரது பங்களிப்பிற்காக இந்த கவுரவ டாக்டர் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

tata

1937-ஆம் ஆண்டு சூரத் நகரில் நாவல் டாடா-சுனூ தன்மதியருக்குப் பிறந்த டாடா ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நிர்வாக மேற்படிப்பை முடித்த பின்னர் தனது குடும்ப நிறுவனமான டாடா குழுமத்தில் பணியாற்றினார். 30 வருடங்கள் டாடா குழுமத்தின் பல்வேறு முன்னேற்றங்களுக்கு பங்காற்றிய ரத்தன் டாடா கடந்த 1991-ஆம் ஆண்டு டாடா குழுமங்களின் தலைவராக, நிறுவனரும் அன்றைய தலைவருமான ஜே.ஆர்.டி டாடாவால் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.