பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவுக்கு 1வருட சிறை தண்டனை!?

 

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவுக்கு 1வருட சிறை தண்டனை!?

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு செக் மோசடி வழக்கில் ஒரு வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு செக் மோசடி வழக்கில் ஒரு வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தெலுங்கு பட நடிகரும், தயாரிப்பாளருமான மோகன்பாபு ஸ்ரீலட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது தயாரிப்பில் கடந்த 2009-ம் ஆண்டு தனது மகன் விஷ்ணு மஞ்சுவை வைத்து ‘சலீம்’ என்ற படத்தைத் தயாரித்திருந்தார். அதை இயக்குநர் ஒய்விஎஸ் சௌத்ரி இயக்கியிருந்தார்.

mohan babu

இந்நிலையில் இயக்குநர் ஒய்விஎஸ் சௌத்ரி, அப்படத்துக்காக தனக்கு அளிக்கப்பட்ட செக் செல்லுபடி ஆகவில்லை என்றும் மீண்டும் அதுகுறித்து கேட்டதற்கு மோகன்பாபு சரியாகப் பதில் அளிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

mohan babu

இதன் ஒரு பகுதியாக ஹைதராபாத் எர்ரம் மன்ஸில் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த வழக்கிற்கு நேற்று  தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நடிகர் மோகன் பாபுவிற்கு 1 வருட சிறை தண்டனையும், 41 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியானது.

ஆனால் இதுகுறித்து மோகன்பாபு தனது ட்விட்டர் பக்கத்தில்,’சில தொலைக்காட்சிகள் பொய்யான செய்திகள் பரப்புவதை இப்போது தான் தெரிந்து கொண்டேன். நான் ஹைதராபாத்தில் உள்ள என் வீட்டில் இருக்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். 

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டாராகவும் இருப்பார்,நடிகர் திலகமாகவும் தெரிவார்! இயக்குனர் மகேந்திரன் பற்றி எஸ்.ஆர்.பிரபாகரன்