பிரபல கோயிலில் சுகாதாரமில்லாத பிரசாதம்… பக்தர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு!

 

பிரபல கோயிலில் சுகாதாரமில்லாத பிரசாதம்… பக்தர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு!

பிரதோஷ பூஜையைக் கண்டு களித்த பக்தர்கள், கோயிலில் கொடுத்த பிரசாதத்தையும் முண்டியடித்து வாங்கி சாப்பிட்டதுடன் நிற்காமல், கோயில் பிரசாதம் என்பதினால், வீட்டில் உள்ளவர்களுக்கும் கொண்டு சென்று கொடுத்தனர்.

எதை தின்றால் பித்தம் போகும் என்கிற நிலையில் தான் பெரும்பாலான பொதுமக்கள் தற்போது தவித்து வருகிறார்கள். ஒவ்வொரு விழாக்காலத்திலும், சிறப்பு நாட்களிலும் வேண்டுதலுக்காகவும் கோயில் கோயிலாக வலம் வருகிறார்கள். இந்நிலையில், கடந்த வாரம் தேய்பிறை பிரதோஷத்தையொட்டி அனைத்து சிவன் கோயில்களிலும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வேதபுரீஸ்வரர் சிவன் கோவிலிலும் கடந்த வியாழனன்று தேய்பிறை பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள்  நடைபெற்றது. வழக்கத்தை விட அதிகளவில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். திரளான பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு புளியோதரை, கடலை போன்ற பிரசாதங்களை வழங்கினார்கள். 

Shivan temple

பிரதோஷ பூஜையைக் கண்டு களித்த பக்தர்கள், கோயிலில் கொடுத்த பிரசாதத்தையும் முண்டியடித்து வாங்கி சாப்பிட்டதுடன் நிற்காமல், கோயில் பிரசாதம் என்பதினால், வீட்டில் உள்ளவர்களுக்கும் கொண்டு சென்று கொடுத்தனர். இந்த பிரசாதத்தைச் சாப்பிட்டவர்களுக்கு அன்றைய தினமே லேசான வயிற்றுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கடுத்த நாளான வெள்ளிக்கிழமை முதல் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு, மருத்துமனையை நோக்கி படையெடுத்தார்கள். 

Shivan temple

புதுச்சேரியைச் சுற்றிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் உணவு ஒவ்வாமையால் பக்தர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இந்திராகாந்தி அரசு தலைமை மருத்துவமனையில் மட்டும் அன்றைய தினமே சுமார் 50க்கும் மேற்பட்டோர் வயிற்றுப் போக்கு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவில் மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்ட பிரசாதம் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படாததே உணவு ஒவ்வாமைக்கு காரணம் என பாதிக்கப்பட்ட பக்தர்கள் தெரிவித்தனர்.