பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கைப் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!?

பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கைப் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!?

இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை படத்தில் நடிக்கப்போகிறார் என்றதும் விஜய் சேதுபதி மீது பல விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இங்கு அப்படம் வெளியாகுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும் தன்னுடைய முன்னாள் படப்பிடிப்புகளை முடித்து விட்டு இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாஸ்டர் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்டு அடித்து வருகிறார். ஆமிர்கானுடன் ஒரு ஹிந்தி படத்தில் நடித்துள்ளார். மேலும் மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. 

vj-sethupathi

விஜய் சேதுபதி தற்போது இலங்கையைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட்வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படுகிறது என்று முன்னேரே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்படத்தில் முத்தையா கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

Muttiah-Muralitharan