பிரபல எழுத்தாளர் மகரிஷி காலமானார்!

 

பிரபல எழுத்தாளர் மகரிஷி காலமானார்!

புவனா ஒரு கேள்விக்குறி, வட்டத்துக்குள் சதுரம், சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு  என 6 திரைப்படங்கள் ஈர்த்து நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவானவை.

பிரபல எழுத்தாளர் மகரிஷி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 87. 

பிரபல எழுத்தாளர் மகரிஷி தஞ்சாவூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் பால சுப்பிரமணியம். மின்வாரியத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற  இவர், தனது எழுத்து பணிக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்று பதவி உயர்வுகளைத் தவித்து வந்தார். 

rajini

இதுவரை மகரிஷி என்ற புனைபெயரில்,  130 புதினங்கள் 5 சிறுகதை தொகுப்புகள், 60 கட்டுரைகள் என  250க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். புவனா ஒரு கேள்விக்குறி, வட்டத்துக்குள் சதுரம், சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு  என 6 திரைப்படங்கள் ஈர்த்து நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவானவை. இதில் புவனா ஒரு கேள்விக்குறி திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். பெரும்பாலும் ஈர்த்து படைப்புக்கள்  பெண்களை மையப்படுத்தியதாகவே இருக்கும். 

maharishi

இந்நிலையில் நீண்ட காலமாகச் சேலத்தில் வசித்து வந்த இவர் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளது குறிப்பிடத்தக்கது