பிரபல இயக்குநர் பா. ரஞ்சித்தின் தந்தை காலமானார்! 

 

பிரபல இயக்குநர் பா. ரஞ்சித்தின் தந்தை காலமானார்! 

 இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன் (63), உடல்நலக் குறைவால் காலமானார்.

சென்னை:  இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன் (63), உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

கடந்த 2012ம் ஆண்டு வெளியான அட்டகத்தி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். அதன் பின்னர் மெட்ராஸ், கபாலி, காலா, என மிகப்பெரிய ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். இவரின்  தந்தை பாண்டுரங்கன் (63) அண்மையில் உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டார். 

அதையடுத்து அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த பாண்டுரங்கன் இன்று அதிகாலை 2 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

bb

அவரின் உடல் சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் கரலப்பாக்கதிற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்பு இன்று மாலை 5 மணி அளவில் கர்லப்பாக்கத்தில் இறுதி ஊர்வலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ரஞ்சித்தின் தந்தையின் மறைவுக்குத் தமிழ் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.