பிரபல இயக்குநர் படத்தில் கமிட்டான பிக் பாஸ் விஜி!

 

பிரபல இயக்குநர் படத்தில் கமிட்டான பிக் பாஸ் விஜி!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகை விஜயலக்ஷ்மி நடிக்கவிருக்கும் புதிய படத்தை இயக்குநர் சிம்புதேவன் இயக்கவிருக்கிறார்.

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகை விஜயலக்ஷ்மி நடிக்கவிருக்கும் புதிய படத்தை இயக்குநர் சிம்புதேவன் இயக்கவிருக்கிறார்.

சன் டிவியின் ப்ரைம் டைம் சீரியல் நடிகையாக ரசிகர்களை கவர்ந்த ‘சென்னை 28’ நாயகி விஜயலக்ஷ்மி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக சன் டிவி சீரியலில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து வைல்ட் கார்ட் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற் விஜி, அனைத்து போட்டியாளர்களுக்கு டஃப் காம்பட்டீஷன் கொடுத்து இறுதிப்போட்டி வரை முன்னேறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எவிக்‌ஷனுக்கு நாமினேட் ஆன விஜிக்கு தங்களது வாக்குகள் மூலம் மக்கள ஆதரவளித்தனர். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் விஜயலக்ஷ்மி தான் நடிக்கவிருக்கும் புதுப்படம் குறித்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், இயக்குநர் வெங்கட் பிரபு தயாரிப்பில், சிம்பு தேவன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இது அவரது ஆர்மியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இறுதியாக சிம்பு தேவன் இயக்கத்தில் தளபதி விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்த ‘புலி’ படம் வெளியானது. இவரது இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருக்கும் ‘24ம் புலிகேசி’ படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.