பிரபல இனிப்பு கடையில் தீ விபத்து: உயிர் சேதம் இல்லை என தகவல்!

 

பிரபல இனிப்பு கடையில் தீ விபத்து: உயிர் சேதம் இல்லை என தகவல்!

சென்னை மயிலாப்பூரில் இயங்கி வந்த பிரபல இனிப்பு கடையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

சென்னை: சென்னை மயிலாப்பூரில் இயங்கி வந்த பிரபல இனிப்பு கடையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

krishna

சென்னை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் இயங்கி வந்த பிரபல இனிப்பு கடையான கிருஷ்ணா ஸ்வீட் கடையில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவலளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் கடையின் பெரும்பாலான பகுதிகள் எரிந்து சேதமாகியுள்ளது. இது குறித்து முதற்கட்ட விசாரணையில், ஏ.சியில் ஏற்பட்ட மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

krishna sweet

கடை திறக்கும் முன்பே இந்த தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதங்கள் ஏதுமில்லை என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.