பிரபல அமெரிக்க பாப் பாடகியின் அம்மாவுக்கு மூளையில் கட்டி

 

பிரபல அமெரிக்க பாப் பாடகியின் அம்மாவுக்கு மூளையில் கட்டி

பிரபல பாப் பாடகியின் அம்மாவுக்கு மூளையில் கட்டி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

பென்சில்வேனியா: பிரபல பாப் பாடகியின் அம்மாவுக்கு மூளையில் கட்டி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

பிரபல அமெரிக்க பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட் ‘மிஸ் அமெரிக்கானா’ என்ற டாக்குமென்ட்ரி படத்தில் நடித்துள்ளார். இதுதொடர்பாக வெரைட்டி இணையதளத்திற்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது தன்னுடைய அம்மாவுக்கு மூளையில் கட்டி இருப்பதாக டெய்லர் ஸ்விப்ட் தெரிவித்தார். ஏற்கனவே டெய்லர் ஸ்விப்ட்-இன் அம்மாவுக்கு புற்றுநோய் இருக்கிறது. இதற்காக அவர் கீமோ சிகிச்சை எடுத்து வருகிறார். அந்த சிகிச்சையின்போது தான் அவருடைய மூளையில் கட்டி இருப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக டெய்லர் ஸ்விப்ட் பேசுகையில், “அனைவருக்கும் அவர்களது அம்மாவை பிடிக்கும். எல்லோருக்குமே முக்கியமான நபராக அம்மா இருக்கிறார். ஆனால் என்னுடைய வாழ்வில் அம்மா தான் வழிநடத்தி செல்பவராக உள்ளார். எந்தவொரு முடிவை எடுப்பதற்கு முன்பும் என்னுடைய அம்மாவிடம் தான் அதை முதலில் தெரிவிப்பேன். எங்கள் குடும்பத்திற்கு இது மிகவும் கடினமான நேரம்” என்றார்.