பிரபலங்கள் அசத்தும் ‘பாட்டில் கேப் சேலஞ்சை’ சொதப்பிய விக்னேஷ் சிவன்!

 

பிரபலங்கள் அசத்தும் ‘பாட்டில் கேப் சேலஞ்சை’ சொதப்பிய விக்னேஷ் சிவன்!

இந்த சவால் என்ன வென்றால், பாட்டிலின் மூடியை கால்களால் உதைத்து, அந்த மூடியை நீக்க வெண்டும். அதே நேரம், பாட்டிலும் கீழே விழக்கூடாது என்பது தான்.  இந்த சேலஞ்சில்

சென்னை: பாட்டில் கேப் சேலஞ்சை சொதப்பிய விக்னேஷ் சிவன் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். 

இணையத்தில் அவ்வப்போது எதாவது ஒரு சேலஞ்ச் வைரலாகி வருவது வழக்கம். திலும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், கிக்கி சேலஞ், ஐஸ் பக்கெட் சேலஞ்ச், பிட்னஸ் சேனலில் சேலஞ்ச், நில்லு நில்லு சேலஞ் போன்றவற்றைப் பார்த்துள்ளோம். 

தற்போது ட்ரெண்டாகியுள்ளது பாட்டில் கேப் சேலஞ்ச். இந்த சவால் என்ன வென்றால், பாட்டிலின் மூடியை கால்களால் உதைத்து, அந்த மூடியை நீக்க வெண்டும். அதே நேரம், பாட்டிலும் கீழே விழக்கூடாது என்பது தான்.  இந்த சேலஞ்சில் ஹாலிவுட் நடிகர்களான ‘ஜேசன் ஸ்டாதம், லீவிஸ் டான், பாலிவுட் நடிகர் அக்சயகுமார் என்று பலரும் இதை வெற்றிகரமாக செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். 

அந்த வரிசையில் புதிதாக இதில் இனைய முயற்சித்த இயக்குநரும், நயந்தவராவின் காதலருமான விக்னேஷ் சிவன் தோல்வியை சந்தித்துள்ளார். பாட்டில் கேப் சேலஞ்ச் முயற்சிக்கும் விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அதில், ‘எவ்வளவு முயற்சி செய்தும், அந்த சேலஞ்ச்சை முடிக்க முடியாத காரணத்தினால், அந்த பாட்டில் கேப்பை கையால் அடித்து விடுகிறார்’. இதை பார்த்த நெட்டிசன்கள் அவரை பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.