பிரதோஷ காலத்தில் உச்சரிக்க வேண்டிய மந்திரம் இது தான்!

பிரதோஷ காலத்தில் உச்சரிக்க வேண்டிய மந்திரம் இது தான்!

சிவனின் பூஜைக்கு உகந்த நாளாக சிவராத்திரி இருப்பதைப் போலவே, காவலனாக வீற்றிருக்கும் நந்திதேவருக்கு உகந்த வேளையாக பிரதோஷ காலம் இருக்கிறது. பிரதோஷம் தினத்தன்று மாலை 4.30 மணியிலிருந்து 6 மணி வரையில் பிரதோஷ காலம் என்று பூஜைகளைச் செய்கிறோம். அப்படியான பிரதோஷ காலத்தில் உச்சரிக்க வேண்டிய பஞ்சாக்ஷர மந்திரத்தை டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

prathosam

இந்த பஞ்சாக்ஷர மந்திரத்தை பிரதோஷ வேளையில் உச்சரித்து நந்தி தேவரையும், சிவனையும் வழிபட்டு வந்தால், வாழ்வில் எல்லா நலன்களும் கிடைக்கப்பெறும். 
“ஓம் நமச்சிவாய”
இந்த மந்திரத்தின் மகிமையே தனி. இந்த மந்திரத்தை பிரதோஷ வேளைகளில் தொடர்ந்து உச்சரித்து வந்தால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். 

1. நமது முன்னேற்றத்தை தடுக்கும் கர்ம வினைகள் அகலும்.

2. உடலும் மனமும் ஆரோக்கியம் பெறும்.

3  குடும்பத்தில் அமைதியும்,மகிழ்ச்சியும் பெருகும்.

4. எதிரிகள் நமது பாதையிலிருந்து விலகுவர்.

5. இறுதியில் மோக்ஷம் கிடைக்கும்.

பிரதோஷ காலத்தில் கீழ் காணும் ஸ்லோகத்தை 18 முறை சொல்லவேண்டும்.

ஸித்தயோகீ மஹர்ஷிச்ச

ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக|

பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச

விபனோம்ருது ரவ்யய:

இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி !

prathosam

பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானை வணங்க வேண்டும் !

“நந்தியம்பெருமான் தன்னை நாடோறும் வணங்குவோருக்கு

புந்தியில் ஞானம் சேரும், பொலிவுறு செல்வம் கூடும்

குலமுறை தழைத்தே ஓங்கும், குணம் நிறை மக்கள் சேர்வர்

சிந்தையில் அமைதி தோன்றும் சிறப்புறும் வாழ்வு தானே.”