‘பிரதமர்’ ராகுல் காந்தி, ‘முதல்வர்’ மு.க.ஸ்டாலின் என்ற நிலை வரும்: திருநாவுக்கரசர் நம்பிக்கை

 

‘பிரதமர்’ ராகுல் காந்தி, ‘முதல்வர்’ மு.க.ஸ்டாலின் என்ற நிலை வரும்: திருநாவுக்கரசர் நம்பிக்கை

நாட்டின் பிரதமராக ராகுல்காந்தியும், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலினும் பதவியில் இருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

சென்னை: நாட்டின் பிரதமராக ராகுல்காந்தியும், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலினும் பதவியில் இருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் தொண்டர்களுடன் பேசவும், அவர்களது கருத்துக்களை அறியவும் சக்தி என்ற செயலியை, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த செயலியின் அறிமுக விழா, சென்னை காமராஜர் அரங்கில் இன்று நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் தொண்டர்களிடையே பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர், நாட்டின் பிரதமராக ராகுல்காந்தியும், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலினும் பதவியில் இருக்கும் நிலை விரைவில் வரும் என நம்பிக்கை தெரிவித்தார். 

mk stalin

மேலும், வருகின்ற பிப்ரவரி 2-வது வாரம் ராகுல்காந்தி தமிழகம் வருவதாகக் கூறிய திருநாவுக்கரசர், காங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்தி மட்டுமே பிரதமர் வேட்பாளர் என்றும், பா.ஜ.க.வில் அப்படி ஒரு நிலைமை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அளவில் மூன்றாவது அணி உருவாகினால், அது பாஜகவிற்கு சாதகமாக மாறக்கூடிய நிலை ஏற்படும் என்பதால், காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய மெகா கூட்டணி உருவாக வேண்டும் என்பதே அரசியல் நோக்கர்களின் எண்ணமாக இருக்கிறது. இந்த நிலையில், திருநாவுக்கரசரின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.