பிரதமர் மோடி வெளிநாட்டு டூருக்கு எவ்வளவு செலவு தெரியுமா?

 

பிரதமர் மோடி வெளிநாட்டு டூருக்கு எவ்வளவு செலவு தெரியுமா?

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு குறித்த விவரங்களை மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் வெளியிட்டுள்ளார்

டெல்லி: பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு குறித்த விவரங்களை மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் வெளியிட்டுள்ளார்.

மாநிலங்களவையில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு  மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் பதிலளித்துள்ளார்.

அதன்படி, கடந்த 2014-ஆம் ஆண்டு அவர் பதவியேற்றது முதல் நடப்பாண்டு டிசம்பர் மாதம் 3-ம் தேதி வரை மொத்தமாக 48 வெளிநாட்டு பயணங்களை பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளார். இந்த பயணங்களில் 55 வெளிநாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். சில நாடுகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை அவர் சென்றுள்ளார். அவரது வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ.2,021 கோடிசெலவிடப்பட்டுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2018 ஜூன் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 77 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து அதிக அளவில் வெளிநாட்டு முதலீடுகள் கிடைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் 2-வது 5 ஆண்டுகள் ஆட்சி காலத்தின் போது, 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வெளிநாட்டு பயணங்களுக்காக ஆயிரத்து 346 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும், 2014ல் 81 ஆயிரத்து 843 அமெரிக்க டாலராக இந்தியாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் இருந்ததாகவும் வி.கே.சிங் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.