‘பிரதமர் மோடி திருடன் என்று கூறிய வழக்கு’ : ராகுல் காந்தியை எச்சரித்த உச்ச நீதிமன்றம்!

 

‘பிரதமர் மோடி திருடன் என்று கூறிய வழக்கு’ : ராகுல் காந்தியை எச்சரித்த உச்ச நீதிமன்றம்!

இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி  வருத்தம் தெரிவித்ததற்குப் பதில்  நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது

கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தல்  பிரசார கூட்டத்தில் பேசிய  ராகுல் காந்தி, ‘ரஃபேல் விமானம் வாங்குவது குறித்த வழக்கில் பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றமே திருடன் எனக் கூறிவிட்டது’ என்று பேசியிருந்தார்.  

modi

இதையடுத்து  பாஜக எம்பி மீனாட்சி லேக்கி, ‘உச்சநீதிமன்றம் அப்படி ஓர் வார்த்தையையே பயன்படுத்தவில்லை. நீதிமன்றம் சொல்லாததைச் சொன்னதாகப் பேசிய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று வழக்கு தொடுத்திருந்தார். இதையடுத்து  ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்திருந்தார். 

rahul

ஆனாலும் அவருக்கு இவ்விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள் தன் பேச்சு குறித்து ராகுல் காந்தி மீண்டும் பிரமாண  பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்த ராகுல், உச்ச நீதிமன்றத்தைச் சுட்டிக்காட்டி மோடியைத் தவறாகப் பேசியதற்காக மீண்டும் வருத்தம் தெரிவித்தார். ராகுல் காந்தியின் பதில் மனுவை நிராகரிக்க வேண்டும். அவர், வருத்தம் தெரிவிப்பது வெறும் கண் துடைப்பே என்று  பாஜக எம்பி மீனாட்சி லேக்கி கோரியிருந்தார். இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி  வருத்தம் தெரிவித்ததற்குப் பதில்  நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. இதனையடுத்து ராகுல் காந்தி தான் பேசியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். மேலும் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

sc

இந்நிலையில் இந்த வழக்கில்  இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், எதிர்காலத்தில் நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, மிகவும் எச்சரிக்கையாகப் பேசவேண்டும் என்று ராகுல் காந்திக்கு அறிவுறுத்தினர்.  இதையடுத்து உச்சநீதிமன்றம் இந்த வழக்கை  முடித்து வைத்தது.