பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து

 

பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து

பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்

புதுதில்லி: பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

பொங்கல் திருநாள் உலகமெங்கும் வாழும் தமிழர்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. விவசாயிகள், இயற்கையின் அருளினாலும், தங்கள் கடின உழைப்பாலும் விளைந்த நெற்கதிர், கரும்பு, வாழை, இஞ்சி, மஞ்சள் ஆகிய பொருட்களை இறைவனுக்குப் படைத்து வழிபட்டு, தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கின்றார்கள்.

நடப்பாண்டின் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், “பொங்கல் திருவிழா நன்னாளில் தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு நல் வாழ்த்துகள். இந்த நாள் நமது சமூகத்தில் மகிழ்ச்சி உணர்வையும், வளத்தையும் மேலும் கொண்டு வர நான் பிரார்த்திக்கிறேன். தேசத்திற்கு உணவளிக்க கடுமையாக உழைக்கின்ற நமது விவசாயிகளுக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம்” என தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.