பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திப்பு

 

பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திப்பு

பிரதமர் மோடியை இன்று சந்திக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கஜா புயல் நிவாரணமாக ரூ.13,000 கோடி நிதி கோருவார் என தகவல் வெளியாகியுள்ளது

டெல்லி: பிரதமர் மோடியை இன்று சந்திக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கஜா புயல் நிவாரணமாக ரூ.13,000 கோடி நிதி கோருவார் என தகவல் வெளியாகியுள்ளது.

கரையை கடந்துள்ள கஜா புயல், தமிழகத்தின் டெல்ட மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது. புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வீடுகளை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் அங்கு இயல்பு நிலை திரும்பாத நிலையில், அப்பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை ஏராளமானோர் செய்து வருகின்றனர்.

இதனிடையே, கஜா புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றடைந்தார். அவருடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் சென்றுள்ளார். அங்கு அவருக்கு அதிமுக-வினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு முதல்வர் சென்றார்.

இந்நிலையில், இன்று காலை 1‌0 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியை ‌‌சந்திக்க இருக்கும் முதலமைச்சர் பழனிசாமி, புயல் பாதிப்பு நிவாரணமாக ரூ.13,000 கோடி நிதி கோருவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் மின் இணைப்புகளை சீரமைக்கும் பணிகளுக்கு மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி கேட்க இருப்பதாக கூறப்படுகிறதுகஜா புயலால் ஏராளமானவர்கள் வீடுகளை இழந்துள்ள நிலையில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கூடுதல் நிதி ஒதுக்கவும் கோரிக்கை முன்வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே புயல் நிவாரண நிதியாக ரூ.1,000 கோடியை விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.