பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு உதவிய பண மதிப்பிழப்பு: ராகுல் குற்றச்சாட்டு

 

பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு உதவிய பண மதிப்பிழப்பு: ராகுல் குற்றச்சாட்டு

டெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கை பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு உதவியதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.

கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது #DeMonetisation என கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று மத்திய அரசு அறிவித்தது. அதேசமயம், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டது.

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஒரு சாரார் வரவேற்பு தெரிவித்தாலும், இன்றளவும் பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல், பண மதிப்பிழப்பு நடவடிக்கை பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அவர் கூறுகையில், பணக்காரர்கள் தங்களின் கறுப்புப் பணத்தை மாற்றிக் கொள்ளவே மத்திய பாஜக அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை உதவியுள்ளது. பணமதிப்பு நீக்கம். இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்குதல் என்றார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க பிரதமர் மோடி தயங்குவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள ராகுல், இந்த நடவடிக்கை தோல்வியடைந்தது குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.