பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து! தீவிரவாதிகளின் திட்டம் அம்பலம்!

பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து! தீவிரவாதிகளின் திட்டம் அம்பலம்!

இந்தியாவிடம் ஒவ்வொரு முறையும் சீண்டிப் பார்த்து, பிரச்சனைகள் எழுந்ததும் பின் வாங்கி வருவது பாகிஸ்தானின் வாடிக்கையான செயல்! இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதைத் தொடர்ந்து, உலக நாடுகளில் எல்லாம் பாகிஸ்தான், இந்தியாவின் இந்த செய்கை குறித்து முறையிட்டது. ஜம்மு-காஷ்மீர், இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று அமெரிக்கா உட்பட உலக நாடுகள் கைவிட்டதும், உலகின் முஸ்லீம் நாடுகள் எல்லாம் இந்த விஷயத்தில் ஒன்று சேர வேண்டும் என்றும் ஆசை வார்த்தை பேசிப் பார்த்தது பாகிஸ்தான்.

modi

அந்த வார்த்தைகளுக்கும் மயங்கி, ஆவேசப்படாமல், நிதானத்தைக் கடைப்பிடித்து வந்தன பிற நாடுகள். இரு நாடுகளும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அது உலகின் பிற நாடுகளையும் பாதிப்படைய செய்யும் என்று மிரட்டும் தொனியில் எல்லாம் பேசிப் பார்த்த பாகிஸ்தான், பின்னர் காஷ்மீர் பிரச்சனையை வேறு விதமாக கையாளத் துவங்கியுள்ளது.
சமீபத்தில், ஆளில்லா விமானங்கள் மூலமாக இந்தியாவிற்குள் ஆயுதங்களை பாகிஸ்தான் களமிறக்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை குறி வைத்து தாக்குதல் நடத்த ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளன.

terroists

இது குறித்து வெளியான செய்தியில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த ஷம்சர் வானிக்கும், மற்றொருவருக்கும் இடையே நிகழ்ந்த தகவல் தொடர்பை சர்வதேச உளவு அமைப்புகள் கண்காணித்தன. இந்த உரையாடலின் மூலமாக, இந்த மாதத்தில் அவர்கள் மிகப்பெரும் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியுள்ளது தெரிய  வந்துள்ளது. இதையடுத்து, ஜம்மு, அமிர்தசரஸ், பதான்கோட், ஜெய்ப்பூர் உள்ளிட்ட 30 நகரங்களில் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.