பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது

 

பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது

பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளுக்கு பிரதமர் மோடிக்கு 2018-ஆம் ஆண்டுக்கான சியோல் அமைதி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

டெல்லி: பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளுக்கு பிரதமர் மோடிக்கு 2018-ஆம் ஆண்டுக்கான சியோல் அமைதி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1990-ம் ஆண்டு தென்கொரிய நகரான சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் நினைவாக, அதே ஆண்டு முதல் சியோல் அமைதி விருது வழங்கப்பட்டு வருகிறது.

பல்வேறு துறைகளில் சிறப்பான சேவையாற்றிய உலக தலைவர்களுக்கு ஆண்டுதோறும் சியோல் அமைதி விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2018-ஆம் ஆண்டுக்கான சியோல் அமைதி விருது இந்திய பிரதமர் மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த விருதைப் பெறும் 14-வது நபராக மோடி திகழ்கிறார்.

ஏழை பணக்காரர் இடையிலான சமூக மற்றும் பொருளாதார வித்தியாசத்தைக் குறைத்தது. உலக அமைதியை மேம்படச் செய்வதற்காக மோடி மேற்கொண்ட அர்ப்பணிப்பான செயல், உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்காக உழைத்தது, உலக அமைதிக்காக பங்காற்றியது உள்ளிட்ட காரணங்களுக்காக பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கபட்டுள்ளது.

அதேசமயம், தனக்கு இந்த விருதை அறிவித்ததற்காக கொரிய குடியரசிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். முந்தைய ஆண்டுகளில் ஐ.நா. முன்னாள் செயலர் கோபி அன்னன், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.