பிரதமர் மோடிக்கு எதிராக களமிறங்கும் பிரியங்கா காந்தி!

 

பிரதமர் மோடிக்கு எதிராக களமிறங்கும் பிரியங்கா காந்தி!

பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் பிரியங்கா, தேர்தலில் போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

புதுதில்லி: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியிட தயார் என அவரது கணவர் ராபர்ட் வதேரா கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் ஏப்ரல் 11, 18, 23,  மற்றும் மே மாதம் 6, 12, 19 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.

rahul, priyanka

மக்களவை தேர்தலையொட்டி, இதுவரையில், தன்னுடைய சகோதரர் ராகுல் காந்திக்காகவும், தாயார் சோனியா காந்திக்காகவும் மட்டுமே தேர்தல் சமயங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த பிரியங்கா காந்தியை, உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராகவும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் அக்கட்சியின் தலைமை நியமித்தது. பிரியங்காவின் அரசியல் வருகை காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இதையடுத்து, பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் பிரியங்கா, தேர்தலில் போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், அவர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என தெரிவிக்கப்பட்டது.

robert priyanka

இந்நிலையில், வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிட பிரியங்கா தயார் என, அவரது கணவர் ராபர்ட் வதேரா கூறியுள்ளார். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்த சூழலில், பிரியங்காவை களமிறக்க வேண்டும் என காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பேசிய பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, நரேந்திர மோடிக்கு எதிராக கவாரணாசியில் களமிறங்க பிரியங்கா தயார் என்றார். அத்துடன், பிரியங்கா காந்தி இதற்கு சம்மதித்து விட்டாலும், அவர் போட்டியிடுவது பற்றி கட்சி தலைமை தான் முடிவெடுக்கும் என்றும் ராபர்ட் வதேரா கூறியுள்ளார்.

இதையும் வாசிங்க

தி.மு.க -அ.தி.மு.க ரெண்டுக்கும் கொஞ்சமாவது புத்தி வந்திருக்கும்னு நினைக்கிறேன் -கமல்ஹாசன்!