பிரதமர் மோடிக்கு உலகின் உயரிய விருது | 

பிரதமர் மோடிக்கு உலகின் உயரிய விருது | 

பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டம் நாடு முழுவதும் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. பொது இடங்களில் மக்கள் மல, ஜலம் கழிப்பதால் வரும் சுகாதார சீர்கேடுகள் மற்றும் அநாகரிகமான பழக்க வழக்கங்களை தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள பொருளாதாரத்தில் நலிந்த பிரிவு மக்களின் வீடுகளில் 5 ஆண்டுகளில் 6 கோடி கழிப்பறைகளை கட்டித்தருவது இந்த ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 

modi

வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதிக்குள் இந்த இலக்கை நிறைவு செய்ய செயல் திட்டம் தீட்டப்பட்டு, வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டும் உள்ளது. இந்நிலையில், இந்த தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் மற்றும் மெலின்டா பில்கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின் சார்பில் உயரிய விருது வழங்கப்படவுள்ளது.
 ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இந்த மாதம் அமெரிக்கா செல்கிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அங்கு வாழும் இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ள நிலையில் பில்கேட்ஸ் – மெலின்டா பில்கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின் விருது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.