பிரதமர் மோகன்லால், பாதுகாவலர் சூர்யா: காப்பான் ரகசியமும் வெளியாகும் தேதியும்?

 

பிரதமர் மோகன்லால், பாதுகாவலர் சூர்யா: காப்பான் ரகசியமும் வெளியாகும் தேதியும்?

கேவி ஆனந்த் உடன் பழம்பெரும் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரன் இணைந்து காப்பான் கதையை உருவாக்கியுள்ளனர். 

கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மூன்றாவது திரைப்படம் காப்பான். இந்தத் திரைப்படம் வெளியாகும் தேதி பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மற்றும் சாயிஷா ஆகியோர் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள படம் காப்பான். இதில் மோகன் லால், ஆர்யா மற்றும் சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைகா சுபாஷ்கரன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கேவி ஆனந்த் உடன் பழம்பெரும் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரன் இணைந்து இந்த கதையை உருவாக்கியுள்ளனர். 

கேவி ஆனந்த் – சூர்யா கூட்டணியில் உருவான அயன் மற்றும் மாற்றான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதனால் காப்பான் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

ayan

இந்த படத்தில் சூர்யா கமெண்டோவாகவும், மோகன் லால் பிரதமராகவும் நடிக்கின்றனர். சூர்யா பிரமருக்கு வரும் ஆபத்தை தடுப்பது போல் இதன் கதையமைப்பு இருக்கிறதாம், அதனால் சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) இந்த படத்தை வெளியிட முடிவு செய்திருந்தனர். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தை ஆகஸ்ட் 30-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. 

kap

செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே, கேவி ஆனந்தின் காப்பான் படங்களுக்கு பிறகு இறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இது அவரது 38-ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.