பிரதமர் பற்றி அவதூறு பேச்சு : நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் !

 

பிரதமர் பற்றி அவதூறு பேச்சு : நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் !

நெல்லை கண்ணன் கடந்த 3 ஆம் தேதி ஜாமீன் கேட்டு  நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி சார்பில் நெல்லையில் நடந்த மாநாட்டில் தமிழ் இலக்கியவாதியும் காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான நெல்லை கண்ணன் கலந்து கொண்டார். அதில் நெல்லை கண்ணன், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தும் அமித்ஷாவின் சோலியை முடிக்க வேண்டும் என்று கூறினார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனையடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என்று பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன் பின்னர், நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார். 

ttn

நெல்லை கண்ணன் கடந்த 3 ஆம் தேதி ஜாமீன் கேட்டு  நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின்னர், கடந்த 7 ஆம் தேதி மீண்டும் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அவருக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபனை தெரிவித்து, வழக்கு தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் வழக்கை ஒத்தி வைத்தனர். இன்று மீண்டும் அந்த மனு விசாரிக்கப்பட்டது. அதில், நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கி நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.