‘பிரதமர் நிவாரண நிதி இருக்கே, இப்போ புதுசா எதுக்கு PM CARES?’: நடிகை கஸ்தூரி ட்வீட்!

 

‘பிரதமர் நிவாரண நிதி இருக்கே, இப்போ புதுசா எதுக்கு PM CARES?’: நடிகை கஸ்தூரி ட்வீட்!

சீனாவின் வூகான் நகரில் பரவிய கொடிய வகை கொரோனா வைரஸ், 180க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வூகான் நகரில் பரவிய கொடிய வகை கொரோனா வைரஸ், 180க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸால் இது வரை 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 909 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து மக்களை காப்பதற்காக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அத்தியாவசிய தேவைக்களுக்காக மட்டும் மக்கள் சமூக விலகலை கடைபிடித்து வெளியே செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ttn

கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க நிதி உதவி அளிக்குமாறு பிரதமர் கோரிக்கை விடுத்ததின் பேரில், பி.எம்.கேர்ஸ் எனப்படும் பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு பலரும் நிதிஉதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று நடிகர் பாலிவுட் நடிகர் அக்சய் குமார் ரூ.25 கோடியும், தொழிலதிபர் ரத்தன் டாடா ரூ.1500 கோடியும் நிதியுதவி அளித்தனர். அதே போல பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

ttn

இந்நிலையில் நடிகை கஸ்தூரி அவரது ட்விட்டர் பக்கத்தில், பொது நிவாரண நிதியை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், அதான் பிரதமர் நிவாரண நிதி PMNRF இருக்கே, இப்போ புதுசா எதுக்கு PM CARES ? வரலாறு முக்கியம் அமைச்சரே.  (MODICARE ன்னு ஒரு கம்பெனி இருக்கு, அந்த பேர் வைக்க முடியாது. ஆனா  NAMO CARES ன்னு வெச்சிருக்கலாம்…)” என்று குறிப்பிட்டுள்ளார்.