பிரதமர் டிமிட்ரி மேட்வேடேவை ரஜினாமா செய்யச் சொன்ன புதின்!  – ரஷ்யாவில் பரபரப்பு

 

பிரதமர் டிமிட்ரி மேட்வேடேவை ரஜினாமா செய்யச் சொன்ன புதின்!  – ரஷ்யாவில் பரபரப்பு

ரஷ்ய அதிபர் புதினின் நம்பிக்கைக்குரியவராக கருதப்பட்ட டிமிட்ரி மேட்வேடேவ் அமைச்சரவையை ராஜினாமா செய்ய புதின் உத்தரவிட்டது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய அதிபர் புதினின் நம்பிக்கைக்குரியவராக கருதப்பட்ட டிமிட்ரி மேட்வேடேவ் அமைச்சரவையை ராஜினாமா செய்ய புதின் உத்தரவிட்டது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

putin

ரஷ்ய அதிபர் புதினின் மிகவும் நம்பிக்கைக்குரிய நபர் அந்நாட்டின் பிரதமராக இருந்த டிமிட்ரி மேட்வேடேவ். இரண்டு முறைக்கு மேல் ஒருவர் அதிபர் பதவியில் தொடர முடியாது என்ற விதிமுறை காரணமாக டிமிட்ரி மேட்வேடேவை ரஷ்ய அதிபராக்கிவிட்டு, பிரதமர் பதவியை ஏற்றார் புதின். பிறகு அவரது ஆட்சிக்காலம் முடிந்ததும் மீண்டும் ரஷ்ய அதிபரானார் புதின். வழக்கம்போல ரஷ்ய பிரதமராக பதவி ஏற்றார் டிமிட்ரி.

dmitry

இந்த அளவுக்கு நம்பிக்கைக்குரியவராக கருதப்பட்ட டிமிட்ரியை ராஜினாமா செய்யும்படி புதின் உத்தரவிட்டார். இதை ஏற்று டிமிட்ரி தன்னுடைய அமைச்சரவையின் ராஜினாமாவை அளித்தார். 
புதினின் பதவிக்காலம் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் முடிவடைய உள்ளது. அவரால் மீண்டும் அதிபர் தேர்தலில் நிற்க முடியாது. இதனால், பிரதமர் பதவிக்கு அதிக அதிகாரம் தரும் வகையில் சட்டத்தை மாற்றிவிட்டு, ஜனாதிபதி அதிகாரத்தை குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் பேசிய புதின், “பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு அதிக அதிகாரம் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

putin

புதிய பிரதமராக அந்நாட்டின் தலைமை வரி அதிகாரி மைக்கேல் மிஷூதின் பதவி ஏற்க உள்ளதாகவும், டிமிட்ரிக்கு மிக முக்கிய பதவி வழங்கப்பட உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. புதினின் இந்த செயலை ரஷ்ய மக்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. சர்வாதிகாரமும் புதின் கையில் இருப்பதால் அமைதியாக நடக்கும் சம்பவங்களை வேடிக்கை பார்த்து வருகின்றனர்.