பிரதமர், சீன அதிபர் வருகை: முன்னேற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கிறார் முதல்வர்…

 

பிரதமர், சீன அதிபர் வருகை: முன்னேற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கிறார் முதல்வர்…

நரேந்திர மோடியும் சீன அதிபரும் மாமல்லபுரத்தில் உள்ள தலைசிறந்த கலைச் சின்னங்களைப் பார்வையிட உள்ளதால் மாமல்லபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுப் பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தப் பேச்சு வார்த்தைக்காக இன்று மாமல்லபுரம் வரவிருக்கின்றனர். அவ்விடத்தில் நடக்கும் முன்னேற்பாடு பணிகளை டிஜிபி மற்றும் தலைமைச் செயலர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். 

India and china presidents

இந்நிலையில், தமிழக முதல்வர் முன்னேற்பாடு பணிகள் சரியாக நடந்து வருகிறதா என்று, இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள மாமல்லபுரம் செல்லவிருக்கிறார். நரேந்திர மோடியும் சீன அதிபரும் மாமல்லபுரத்தில் உள்ள தலைசிறந்த கலைச் சின்னங்களைப் பார்வையிட உள்ளதால் மாமல்லபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுப் பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

Mamallapuram

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் விதமாக, மீனவர்கள் வரும் 6 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம் பகுதிகளில் பாதுகாப்பிற்காக உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள், அந்த துப்பாக்கிகளை அவரவர் எல்லைக்கு உள்ளான காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்றும் மாவட்ட காவல் நிர்வாகம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.