பிரதமர் கூறியபடி மின்விளக்குகளை ஒரேநேரத்தில் அணைப்பதால் பிரச்சனை இல்லை – மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்

 

பிரதமர் கூறியபடி மின்விளக்குகளை ஒரேநேரத்தில் அணைப்பதால் பிரச்சனை இல்லை – மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்

பிரதமர் மோடி கூறியதுபோல ஒரேநேரத்தில் மின் விளக்குகளை அணைப்பதால் பிரச்சனை இல்லை என மத்திய மின்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

டெல்லி: பிரதமர் மோடி கூறியதுபோல ஒரேநேரத்தில் மின் விளக்குகளை அணைப்பதால் பிரச்சனை இல்லை என மத்திய மின்துறை அமைச்சர் கூறியுள்ளார்.  

பிரதமர் மோடி நேற்று வீடியோ மூலம் மக்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சவாலுக்கு  எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி.அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள். ஊரடங்கு மதித்து நடக்கும் மக்களுக்கு நன்றி. இந்தியாவில் மக்கள் ஊரடங்கு உலக அளவில் முன்னுதாரணமாக மாறியுள்ளது. ஏப்ரல் 5-ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்கை அணையுங்கள். வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

ttn

இந்த நிலையில், எல்லா மின்விளக்குகளையும் ஒரே நேரத்தில் அணைப்பதால் மின்தொகுப்பு பாதிக்கப்படாது என்று மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் மின் விளக்குகளை ஒரேநேரத்தில் அணைப்பதால் 15 ஜிகாவாட் மின்தேவை குறையும். ஒட்டுமொத்தத் தேவையில் இது 4 சதவீதத்திற்கும் குறைவு தான் என்று அவர் தெரிவித்தார்.