பிரதமர், குடியரசுத் தலைவர், அமைச்சர்கள், எம்.பி ஆகியோரின் சம்பளம் 30 சதவீதம் குறைப்பு

 

பிரதமர், குடியரசுத் தலைவர், அமைச்சர்கள், எம்.பி ஆகியோரின் சம்பளம் 30 சதவீதம் குறைப்பு

எம்.பி.எல்.ஏ.டி.எஸ் திட்டத்திலிருந்து ரூ.7,900 கோடி இந்திய ஒருங்கிணைந்த நிதிக்குச் செல்லும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

டெல்லி: எம்.பி.எல்.ஏ.டி.எஸ் திட்டத்திலிருந்து ரூ.7,900 கோடி இந்திய ஒருங்கிணைந்த நிதிக்குச் செல்லும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பொருளாதாரத்தில் எதிர்பார்க்கப்படும் சரிவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வரும் ஆண்டுகளில் மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் 30 சதவீதம் குறைக்கப்படும் என்று மத்திய அமைச்சரவை இன்று முடிவு செய்தது. இன்று மாலை இந்த அறிவிப்பை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.

modi

அதன்படி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு மற்றும் அனைத்து மாநில ஆளுநர்களும் 30 சதவீத சம்பளக் குறைப்பை எடுக்க தானாக முன்வந்து முடிவு செய்துள்ளதாக  பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

இந்த பணம் நாட்டின் ஒருங்கிணைந்த நிதிக்குச் செல்லும் என்று அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு வீடியோ மாநாடு மூலம் அமைச்சர் கூறினார். அந்த வகையில் எம்.பி.எல்.ஏ.டி.எஸ் திட்டத்திலிருந்து சுமார் ரூ.7,900 கோடி இந்திய ஒருங்கிணைந்த நிதிக்குச் செல்லும் என்று ஜவடேகர் கூறினார்.