பிரதமர், உள்துறை அமைச்சருக்கு மிரட்டல் ! கால்டாக்சியில் பயணித்தவரை காவல்துறை வாகனத்தில் ஏற்றியது போலீஸ் !

 

பிரதமர், உள்துறை அமைச்சருக்கு மிரட்டல் ! கால்டாக்சியில் பயணித்தவரை காவல்துறை வாகனத்தில் ஏற்றியது போலீஸ் !

பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரின் தலைக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக முகநூலில் பதிவிட்ட சென்னை கால் காக்ஸி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரின் தலைக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக முகநூலில் பதிவிட்ட சென்னை கால் காக்ஸி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் கால்டாக்சி ஓட்டுனராக பணிபுரிந்து வரும் அப்துல் ரகுமான் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை அரக்கர்கள் போல சித்தரித்து படம் பதிவிட்டிருந்தார். மேலும் அவர்களது தலைக்கு ஒரு கோடி ரூபாய் தரப்படும் என்று பதிவிட்டிருந்தார். இது குறித்து நெல்லை முத்துப்பாண்டி என்பவர் காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து காவல்துறையினர் முகநூலில் அவதூறு பதிவிட்ட அப்துல் ரகுமான் என்பவரை  தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் பதுங்கி இருந்தபோது கைது செய்தனர்.

kayal pattinam

இது குறித்து அப்துல் ரகுமானிடம் மேற்கொண்ட விசாரணையில் காஷ்மீரில் சிறப்பு சட்டம் 370 வது பிரிவை நீக்கிய நடவடிக்கையை கண்டித்தும், தமிழகத்தில் இந்தி மொழி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தனக்கு வந்த தகவல்களை பார்வர்டு செய்ததாகவும் மற்றபடி தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒருவேளை அது பார்வர்டு செய்தியாக இருக்கும் பட்சத்தில் அதை யார் அனுப்பியது என விசாரணை நடத்தப்பட்டு வருவதாக நெல்லை காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் அப்துல் ரகுமானிடம் இருந்து நவீன வசதிகள் கொண்ட செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. செல்லதுரை என பெற்றோரால் பெயர் வைக்கப்பட்ட அப்துல் ரகுமான் 6 வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்வதற்காக மதம் மாறியதாக தெரிவித்தார்.

முகநூலில் பிறரை மிரட்டும் வகையிலோ, ஆபாசமாக சித்தரித்தோ கருத்து வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே காவல்துறையினரின் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.