பிரதமரை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

 

பிரதமரை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார்

டெல்லி: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார்.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கான கர்நாடகத்தின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் தீர்மானத்தையும் தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. இதற்கிடையே மேகதாது அணை தொடர்பாக பேசி தீர்த்துக்கொள்ளலாம் என கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று கொடி நாள் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, மதியம் 1 மணியளவில் விமானம் மூலம் டெல்லி செல்கிறார். மாலை 5.30 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, மேகதாது அணை பிரச்னையால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து பிரதமரிடம், அவர் விளக்குவார் என தெரிகிறது.