பிரதமருக்கு வீடு கட்டுவது உள்ளிட்ட ரூ.20 ஆயிரம் கோடி திட்டத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது? – தயாநிதி மாறன் கேள்வி

பிரதமருக்கு வீடு கட்டுவது உள்ளிட்ட ரூ.20 ஆயிரம் கோடி திட்டத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது? – தயாநிதி மாறன் கேள்வி

தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்துவிட்டால் தொகுதியில் உள்ள மருத்துவமனையின் அவசர தேவைக்கு எப்படி உதவுவது… பிரதமரின் வீடு கட்டும் ரூ.20 ஆயிரம் கோடி திட்டத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா தடுப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பணிகளுக்கு தேவையான நிதியைத் திரட்டும் வகையில் எம்.பி-க்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்வது என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு தமிழக எம்.பி-க்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

modi-893

இது குறித்து தயாநிதிமாறன் எம்.பி கூறுகையில், “எம்.பி-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை வேறு திட்டத்துக்கு மாற்றிவிடுவதாக அரசு அறிவித்திருப்பது மிகப்பெரிய அச்சுறுத்தல். என்னுடைய தொகுதியில் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஓமந்தூரார் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, சேத்துப்பட்டு டி.பி மருத்துவமனை, அயனாவரம் இ.எஸ்.ஐ மருத்துவமனை உள்ளிட்ட பல மருத்துவமனைகள் உள்ளன.

dhayanidhi-maran-67

இவற்றுக்கு ஏதாவது அவசர நிலை எனில் கட்டமைப்பை உருவாக்க தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி தேவைப்படுகிறது. அப்படி ஏதும் அவசரம் என்றால் அதை செய்ய மத்திய அரசு முன்வருமா? 
எம்.பி-க்களுக்கு ஒதுக்கப்படும் ஐந்து கோடி ரூபாய் என அனைத்து தொகுதிகளுக்கும் கணக்கிட்டால் மொத்தம் இரண்டு ஆண்டுகளுக்கு மொத்தம் 7900 கோடி ரூபாய் தான் வருகிறது. பிரதமருக்கு வீடு கட்டுவது உள்ளிட்ட ரூ.20 ஆயிரம் கோடி திட்டத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.