பிரதமரின் நிதி உதவி திட்டம் உட்பட கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சச்சின் ரூ.50 லட்சம் நிதியுதவி!

 

பிரதமரின் நிதி உதவி திட்டம் உட்பட கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சச்சின் ரூ.50 லட்சம் நிதியுதவி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர்  50 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். 

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 743ஐ கடந்த நிலையில், இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டதால் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்தியா முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

sachin

இந்நிலையில் பிரதமரின் நிதி உதவி திட்டத்துக்காக 25 லட்சம் ரூபாயும், மாநில முதலமைச்சரின் நிதி உதவி திட்டத்துக்காக 25 லட்சம் ரூபாயும் அவர் வழங்கியுள்ளார். பிசிசிஐ தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, 50 லட்சம் ரூபாய் மதிப்புக்கு அரிசியை நன்கொடையாக ஏற்கனவே வழங்கியுள்ளார். குஜராத்தை சேர்ந்த பதான் சகோதரர்கள், பரோடா காவல் துறைக்கு நான்காயிரம் முகக்கவசங்களை வழங்கியுள்ளனர்.