பிரதமரின் சுய ஊரடங்கு முடிவுக்கு கமல்ஹாசன் ஒத்துழைப்பு.. நடிகர்கள் ரஜினி, அஜித்,விஜய் உள்ளிட்டோருக்கு அழைப்பு!

 

பிரதமரின் சுய ஊரடங்கு முடிவுக்கு கமல்ஹாசன் ஒத்துழைப்பு.. நடிகர்கள் ரஜினி, அஜித்,விஜய் உள்ளிட்டோருக்கு அழைப்பு!

கொரோனா குறித்து மக்கள் பீதியடைந்திருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மக்களிடம் உரையாடினார்.

கொரோனா குறித்து மக்கள் பீதியடைந்திருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மக்களிடம் உரையாடினார். அதில், கொரோனா இந்தியாவுக்கு வராது என்று நினைக்க வேண்டாம். மிகவும் மோசமான நிலையில் இருக்கிறோம். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வெளியே வர வேண்டாம். முடிந்தவரை 22 ஆம் தேதி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். யாரும் மெத்தனமாக இருக்க வேண்டாம். கொரோனா இந்தியாவைப் பாதிக்காது என்று எண்ணினால் அது தவறு. வரும் சில வாரங்களுக்கு அரசுடன் ஒத்துழைப்பு கொடுங்கள் என்று தெரிவித்தார். 

ttn

மேலும், 22 ஆம் தேதி சுய ஊரடங்கு முறையைப் பின்பற்றுவோம் என்றும் அத்தியாவசிய பணியில் வேலை செய்பவர்கள் தவிர வேறு யாரும் வெளியே வர வேண்டாம் என்று கூறினார். கொரோனாவை ஒழிக்கும் இந்த முடிவுக்குப் பல தரப்பினர் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சுய ஊரடங்கு முடிவுக்கு ஆதரவு தெரிவித்து நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

அதில், “பிரதமர் மோடியின் ஊரடங்கு கோரிக்கைக்கு நான் ஒத்துழைப்பு அளிக்கிறேன். இந்த அசாதாரண சூழ்நிலையில், நாம் அசாதாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இது நமக்கு ஏற்பட்ட ஒரு பேரழிவு. ஒற்றுமையாகவும் வீட்டிற்குள்ளும் இருப்பதன் மூலம், நாம் நம்மைப் பாதுகாப்பாக இருக்க முடியும்.  என்னுடன் சேர்ந்து காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இதற்கு ஒத்துழைப்பு அழைக்க என் நண்பர்களையும் அழைக்கிறேன்” என்று பதிவிட்டு நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித், விஜய்,சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி ஆகியோரையும் இசையமைப்பாளர் இளையராஜா, அனிருத், ஜி.வி.பிரகாஷ்,கிப்ரான் ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.