பிரதமரின் உத்தரவை மீறி பவுலுங்கை தேர்வு செய்த பாகிஸ்தான்

 

பிரதமரின் உத்தரவை  மீறி பவுலுங்கை தேர்வு செய்த பாகிஸ்தான்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது 

 

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃபிராஸ் அகமது முதலில் பந்து வீச முடிவு செய்தார். இந்த ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணியில் தமிழக வீரர் விஜய் ஷங்கர் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் கான் டாஸ் வென்றால் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் சர்ஃபராஸ் புறக்கணித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணிக்காக இம்ரான் கான் தனது ட்விட்டரில் வாழ்த்தும் வெற்றிக்கான ஆலோசனைகளையும் பதிவிட்டிருந்தார். அதில் ‌‌‌1992ஆம் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து வெற்றி கண்டது என்றும் இதேப்போல் இன்றைய போட்டியில் கேப்டன் சர்ஃபராஸ் கான் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தால் வெற்றி பெறலாம் என ஆலோசனை வழங்கியிருந்தார். ஆனால் இந்த ஆலோசனையை புறக்கணித்துள்ள சர்ஃபராஸ் கான் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.