பிரதமராக இருந்துகொண்டு மூட நம்பிக்கையை வளர்க்கக் கூடாது! – பா.ஜ.க முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா

 

பிரதமராக இருந்துகொண்டு மூட நம்பிக்கையை வளர்க்கக் கூடாது! – பா.ஜ.க முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா

பிரதமர் மோடி நாளை இரவு மின் விளக்குகளை அணைத்துவிட்டு வீடுகளில் விளக்கேற்றும்படி கூறியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் மின்விளக்குகளை அணைத்தால் மின்விநியோகத்தில் தடுமாற்றம் ஏற்படும்.

இந்திய பிரதமராக இருந்துகொண்டு மோடி மூட நம்பிக்கையை வளர்க்கக் கூடாது என்று பா.ஜ.க முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நாளை இரவு மின் விளக்குகளை அணைத்துவிட்டு வீடுகளில் விளக்கேற்றும்படி கூறியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் மின்விளக்குகளை அணைத்தால் மின்விநியோகத்தில் தடுமாற்றம் ஏற்படும். மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அதை சரி செய்யவே ஒரு வாரத்துக்கு மேல் ஆகும். இதனால் கொரோனா தடுப்பு பணிகள் பாதிக்கப்படும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

tneb-78

இந்த நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், “இந்திய பிரதமர் மோடி நாட்டின் மூட நம்பிக்கைகளை வளர்க்கக் கூடாது. காலை 9 மணி, 5-4, இரவு 9 மணி, 9 நிமிடங்கள்… இதனால் என்ன சொல்ல வருகிறார்? எதற்காக இந்த நாடு இதை சகித்துக்கொள்ள வேண்டும்? தற்போதே மிக பின்தங்கி இருக்கிறோம், இப்போதாவது விழித்துக்கொள்ளுங்கள். என்னுடைய பதிவு பக்தாஸ்களால் புரிந்துகொள்ள முடியாது” என்று கூறியுள்ளார்.