பிரச்சனை முடிந்தது: லாரண்ஸ்-யிடம் வருத்தம் தெரிவித்த சீமான்

 

பிரச்சனை முடிந்தது: லாரண்ஸ்-யிடம் வருத்தம் தெரிவித்த சீமான்

லாரன்ஸ் மீது எனக்கு எப்போதும் வருத்தமில்லை. மதிப்புதான் உள்ளது. அவர் மாற்றுத்திறனாளிப் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார், உதவி செய்கிறார். அவர் சேவை குணத்தின் மீது எனக்கு மதிப்பு அதிகம். யாராவது சிலர் புரிதல் இல்லாமல் விமர்சித்து இருக்கலாம்.

சென்னை: ராகவா லாரண்ஸ்க்கு நாதக தம்பிகளால் பிரச்சனை என்றால், அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என சீமான் கூறியிருக்கிறார்.

நடிகர் ராகவா லாரண்ஸ் தனது மாற்றுத் திறனாளி மாணவர்களை, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவாளர்கள் தொடர்ந்து வம்பிழுப்பதாகவும், வசை பாடுவதாகவும் தெரிவித்து ஒரு எச்சரிக்கை கடிதத்தை வெளியிட்டார். சமாதானமா?, சவாலா?, முடிவை நீங்களே எடுங்கள் என கடிதத்தை முடித்திருந்தார். அதற்கு சீமான் தரப்பில் இருந்து இயக்குநர் சுரேஷ் காமாட்சி பதிலடி கொடுத்தார். இந்நிலையில் ராகவா லாரண்ஸ்க்கு நிகழ்ந்த பிரச்சனைக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் காமாட்சி – சீமான்

fzsvf

இதுகுறித்து சீமான், லாரன்ஸ் மீது எனக்கு எப்போதும் வருத்தமில்லை. மதிப்புதான் உள்ளது. அவர் மாற்றுத்திறனாளிப் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார், உதவி செய்கிறார். அவர் சேவை குணத்தின் மீது எனக்கு மதிப்பு அதிகம். யாராவது சிலர் புரிதல் இல்லாமல் விமர்சித்து இருக்கலாம். அப்படி செய்திருந்தால் அது தவறுதான், அது யாரென கண்டறிந்து நடவடிக்கை எடுக்கலாம்.

சீமான்

லாரன்ஸை ஒரு எதிரியா பார்க்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. யாராவது ஒருவர் நம்ம பேரை சொல்லி வம்பிழுப்பாங்க. போலியான முகநூல் பக்கங்களை வைத்துக்கொண்டு நான் பேட்டி கொடுக்காமலேயே, நான் கொடுத்ததாக போடுவாங்க. அதுபோன்ற வேலைகளும் நடக்க வாய்ப்பு உண்டு. அப்படி யார் செய்திருந்தாலும் அது தவறு. நான் தம்பி லாரன்ஸ்கிட்ட என் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.

இதையும் வாசிங்க: ஸ்ரீரெட்டி கிட்ட சவால் விடுங்க லாரண்ஸ்: சீமான் ஆதரவாக சுரேஷ் காமாட்சி