பிரசாரத்திற்கு செல்லும் வேட்பாளர்களே உஷார்: நூதன திருட்டில் ஈடுபடும் கொள்ளையர்கள்; வீடியோ உள்ளே!

 

பிரசாரத்திற்கு செல்லும் வேட்பாளர்களே உஷார்: நூதன திருட்டில் ஈடுபடும் கொள்ளையர்கள்; வீடியோ உள்ளே!

ஓட்டுக்கேட்க வந்த பெண்ணின் கையிலிருந்த மோதிரத்தை ஒருவர் உருவிக் கொண்டு ஓடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குண்டூர்: ஓட்டுக்கேட்க வந்த பெண்ணின்   கையிலிருந்த மோதிரத்தை ஒருவர் உருவிக் கொண்டு ஓடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

jagan

ஆந்திர மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியும் கடும் போட்டியிட்டு வருகின்றனர். இதனால்  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தங்கள் கட்சிக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது முதல், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

reddy

இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா தங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதற்காக நேற்று அவர் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில்,  பேருந்திலிருந்தபடியே பிரசாரம் செய்தார். அப்போது ஆர்வத்துடன் கைகொடுக்க வந்த தொண்டர்களுடன் கை குலுக்கி மகிழ்ந்தார். 

 

அப்போது எதிர்பாராத விதமாக,  சர்மிளாவிடம் கைகுலுக்கிய நபர் ஒருவர், அவரின்  கையிலிருந்த மோதிரத்தை உருவிக்கொண்டு ஓடினார். தொண்டர்கள் மத்தியில் இந்த சம்பவம் நடந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இருப்பினும் கூட்டம் அதிகமாக இருந்ததால், திருடனை கண்டுபிடிக்க முடியவில்லை.  இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதையும் வாசிக்க: கட்டுக் கட்டான பணத்துக்கு சொந்தக்காரர் வேலுமணி, துரைமுருகன் அல்ல; வெளியாகும் தகவல்கள்?!