பிரசாந்த் கிஷோர் மீது நம்பிக்கைத் துரோகம் செய்த பிரிவில் வழக்குப் பதிவு!

 

பிரசாந்த் கிஷோர் மீது நம்பிக்கைத் துரோகம் செய்த பிரிவில் வழக்குப் பதிவு!

பிரசாந்த் கிஷோர். பீகாரைச் சேர்ந்த இந்த இளைஞர்தான் 2012 ஆம் ஆண்டு, குஜராத்தில் நரேந்திர மோடி மீண்டும் முதல்வர் பதவியை கைப்பற்றுவதற்கு மிகப்பெரிய வியூகங்களை வகுத்து தந்தவர். தொட‌ர்ந்து 2014 ஆம் ஆண்‌டு மக்களவைத் தேர்தலின்போது, மோடி பிரதமராகுவதற்காக அதிரடியாக பல வியூகங்களை வகுத்ததால், நாடு முழுவதும் அறியப்பட்டார். 2018 ஆம் ஆண்டு நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார் பிரசாந்த் கிஷோர். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தெரவித்தது. இதற்கு பிரசாந்த் கிஷோர் எதிர்ப்பு தெரிவித்ததால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

prashant kishor

அரசியல் வியூகம் வகுத்துக்கொடுப்பதில் வல்லவரான பிரசாந்த் கிஷோர் மீது மோதிகாரியை சேர்ந்த சாஸ்வத் கவுதம் என்பவர் பாடலிபுத்திரா காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், பிரசாந்த் கிஷோர் நடத்தி வரும் பாத் பீகார் கி இயக்கம், தன்னுடைய கருத்துருவைப் திருடிப் பயன்படுத்திக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ஏமாற்றுதல், நம்பிக்கைத் துரோகம் செய்தல் ஆகிய பிரிவுகளில் பிரசாந்த் கிஷோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.