பிரசவத்திற்கு பின்னும் சிலிம்மாக இருக்கும் சானியா…ரகசியம் என்ன

 

பிரசவத்திற்கு பின்னும் சிலிம்மாக இருக்கும் சானியா…ரகசியம் என்ன

என்னுடைய எடை குறைப்பிற்கு மிக முக்கியமான காரணம் என்னுடைய கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு தான். பிரசவத்திற்குப் பின்னர் நான் 26 கிலோ எடையை குறைத்துள்ளேன். இதற்காக தினமும் ஜிம் செல்வேன். இதன் செயல்முறையின் நுணுக்கங்களை எனது இன்ஸ்டாகிராமில் சில நாட்களுக்கு ஒரு முறை பகிர்ந்து வருகிறேன்

சானியா மிர்சா தனது எடை குறிப்பின் ரகசியங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சா கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்-ஐ திருமணம் செய்துக் கொண்டார். கடந்த அக்டோபர் மாதம் இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பின் அண்மையில் தனது இடை குறைப்பு குறித்த   புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 

​​​​சானியா மிர்சா

இது குறித்து பேசிய சானியா “எனது  உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எடை குறைப்பின் ரகசியம் குறித்து கேட்டு வந்தனர். அவர்களுக்காக இன்ஸ்டாகிராமில் இது குறித்த கருத்து மற்றும் விடியோக்களை பதிவிட்டேன்”  என்றார்

மேலும் அவர்,” என்னுடைய எடை குறைப்பிற்கு மிக முக்கியமான காரணம் என்னுடைய கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு தான். பிரசவத்திற்குப் பின்னர் நான் 26 கிலோ எடையை குறைத்துள்ளேன். இதற்காக தினமும் ஜிம் செல்வேன். இதன் செயல்முறையின் நுணுக்கங்களை எனது இன்ஸ்டாகிராமில் சில நாட்களுக்கு ஒரு முறை பகிர்ந்து வருகிறேன்” என்றார்.

இதனைத் தொடர்ந்து அவர் “அனைத்து பெண்களுக்கும் ஒன்று தான் கூற விரும்புகிறேன் நம்மாள் செய்ய முடியாத ஒன்றை எவராலும் செய்ய இயலாது என்று நினைக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் அல்லது 2 மணிநேரம் பயிற்சி செய்தால் போதும் எளிதாக நமது எடையை குறைத்து விடலாம்” என்று பதிவிட்டுள்ளார்.

சானியா மிர்சா

இதனுடன் சேர்த்து சானியா மிர்சா ஒரு த்ரோபேக் வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் ஜிம்மில் பயிற்சி செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது.இந்த வீடியோ சுமார் 2 லட்சம் தடவை பார்க்கப்பட்டுள்ளது. இது குறித்து பலர் அவரை பாராட்டி இன்ஸ்டா பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.

இறுதியாக அவர் ஆகஸ்டில் நடைபெற உள்ள  சர்வதேச சுற்றுக்கு தயாராகி வருவதாகவும், தனது உடல் அதற்கு நிச்சயம் ஒத்துழைக்கும் என்றும் தெரிவித்தார்.