பிரகாஷ்ராஜுக்காக விசில் அடிக்கும் நடிகர் விஷால்: எப்படி தெரியுமா?

 

பிரகாஷ்ராஜுக்காக விசில் அடிக்கும் நடிகர் விஷால்: எப்படி தெரியுமா?

கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக, போட்டியிடும் நடிகர் பிரகாஷ் ராஜூக்கு நடிகர் விஷால் ஆதரவு தெரிவித்துள்ளார். 

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக, போட்டியிடும் நடிகர் பிரகாஷ் ராஜூக்கு நடிகர் விஷால் ஆதரவு தெரிவித்துள்ளார். 

கடுமையாக விமர்சித்த  பிரகாஷ் ராஜ்

prakash

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், அண்மைக்காலமாக மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இதையடுத்து கர்நாடகாவில்  மக்களவை தேர்தலானது,  2வது மற்றும் 3வது கட்ட வாக்குப்பதிவு முறையே ஏப்ரல் 18 மற்றும் 23ஆம் தேதி நடைபெறவுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. 

பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டி

campaing prakash

இதனிடையே பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த நடிகர் பிரகாஷ் ராஜ்,  தன்னை பொது வேட்பாளராக அறிவித்து மதச்சார்பற்ற கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். அவருக்கு ஆம் ஆத்மி கட்சி மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளது. விசில் சின்னத்தில் போட்டியிடும்  அவர் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.

நானும் ஆதரவளித்து விசிலடிப்பேன், மக்களும் விசிலடிப்பார்கள்

vihsl

 

இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார் நடிகர் விஷால். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘சுயேட்சையாக போட்டியிடுவதற்குத் தைரியமும் நாட்டின் மீது பற்றும் வேண்டும். வெற்றி பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் பிரகாஷ் ராஜுக்கு உண்டு.  அவரது விசில் சின்னத்துக்கு நானும் ஆதரவளித்து விசிலடிப்பேன், மக்களும் விசிலடிப்பார்கள்’ என்று கூறியுள்ளார். 

நட்பின் அடையாளம் 

prakash raj

பிரகாஷ் ராஜுடன் தோரணை, தீராத விளையாட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களில் விஷால் நடித்தாலும், நடிகர் சங்க கட்டட விவகாரத்தில் இருவருக்கும் கருத்து ஒற்றுமை ஏற்பட்டது. பிரகாஷ் ராஜ் அவ்விவகாரத்தில் விஷாலுக்கு துணையாகவும் ஆதரவாகவும் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்க: பழைய பிரியாணி சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி: அதிர்ச்சி சம்பவம்!