பிப். 5 தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு…225 சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு !

 

பிப். 5 தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு…225 சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு !

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோவில் கோவிலின் குடமுழுக்கு விழா வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோவில் கோவிலின் குடமுழுக்கு விழா வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த கோவிலில் சீரமைப்பு பணிகள் பணிகள் நடந்து முடிந்ததால் ஒரு தரப்பினர் தமிழ் வழியில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்றும் மற்றொரு தரப்பினர் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் ஆகம விதிகளின் படியே நடத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதனால் இக்கோவிலில் குடமுழுக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழியில் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில் குடமுழுக்கு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.  

ttn

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், வரும் பிப்.5 ஆம் தேதி நடக்க உள்ள குடமுழுக்கு விழாவுக்காக உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியைக் காண 10 லட்சம் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடமுழுக்கு நிகழ்ச்சி அன்று நடக்கவிருக்கும் யாகசாலை பூஜைகளுக்காக மொத்தம்  11,900 சதுர அடி பரப்பளவில் யாகசாலை கூடம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் தெரிவித்தார்.  

ttn

* போலீஸ் பாதுகாப்பு
குடமுழுக்கைக் காண வரும் பொதுமக்களின் கூட்டத்தைக் கண்காணிக்க  4,492 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதுமட்டுமில்லாமல் கூட்ட நெரிசலைக் கண்காணிக்க 110 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. அதுமட்டுமில்லாமல் கதவுகளுடன் கூடிய தடுப்பு அமைக்கப்பட்டு 30 தீயணைப்புத் துறை வீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 

ttn

* 225 சிறப்புப் பேருந்துகள் 
குடமுழுக்கைக் காண வெளியூரில் இருந்து வரும் மக்களின் வசதிக்காக 21 தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு, 225 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதுமட்டுமில்லாமல், பள்ளி வாகனம், வேன் உள்ளிட்டவற்றைக் கொண்டு 175 சிறப்பு வாகனங்கள் ரயிலடி வரை இயக்கப்பட உள்ளன. ஏற்கனவே செயல்பட்டு வரும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இயக்கவும், சிறப்பு ரயில்கள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ttn

* மக்கள் பாதுகாப்பு
மக்களின் உடைமைகளைப் பாதுகாக்க சுமார் 1,500 தன்னார்வலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக 30 பேட்டரி கார்களும், 130 வீல் சேர்களும் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. கோவிலைச் சுற்றி சுமார் 275 இடங்களில் குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டு அவ்வப்போது தண்ணீர் லாரிகள் கொண்டு நிரப்பப்படும். பொதுமக்களின் வசதிக்காக 238 கழிவறைகளும், 800 குப்பைத்தொட்டிகளும் அமைக்கப்பட உள்ளது. மேலும், 26 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. 

ttn

* ஓய்வெடுக்கும் இடங்கள்
நடந்து செல்லும் மக்கள் மற்றும் முதியவர்கள் களைப்பாறுவதற்காக ஓய்வெடுக்கும் இடங்கள் அமைக்கப்பட உள்ளது. அதுமட்டுமில்லாமல் மக்களுக்கு வழிகாட்டுவதற்காக வழிகாட்டி பலகைகளும் அமைக்கப்பட உள்ளது.